< Back
சினிமா செய்திகள்
NKR21: first look poster release
சினிமா செய்திகள்

என்கேஆர்21: பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
5 July 2024 11:52 AM IST

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி கல்யாண் ராம். இவர் பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஆவார். நந்தமுரி கல்யாண் ராம் நடித்த அதானொக்கடே, ஹரே ராம், 118 போன்ற அதிரடித் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது இவர் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்கேஆர்21 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் பிரதீப் சிலுக்குரி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் மஞ்சரேக்கர் நடிக்கிறார். மேலும், நடிகை விஜயசாந்தி, நடிகர்கள் சோஹல் கான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக என்கேஆர்21 படத்தின் படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்