< Back
சினிமா செய்திகள்
நிவின் பாலி படத்தின் புதிய அறிவிப்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா செய்திகள்

நிவின் பாலி படத்தின் புதிய அறிவிப்பு- உற்சாகத்தில் ரசிகர்கள்

தினத்தந்தி
|
28 Dec 2023 10:13 PM IST

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஜனவரி 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்