< Back
சினிமா செய்திகள்
வித்தியாசமான தோற்றத்தில் நிவின் பாலி - கவனம் ஈர்க்கும் போஸ்டர்
சினிமா செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் நிவின் பாலி - கவனம் ஈர்க்கும் போஸ்டர்

தினத்தந்தி
|
11 Nov 2022 9:47 PM IST

'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் நடிகர் நிவின் பாலி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்‌சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் படக்குழு கதாபாத்திரங்களின் போஸ்டரை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை அஞ்சலி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் நிவின் பாலி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீளமான முடியுடன் காட்சியளிக்கும் நிவின் பாலி கையில் இரும்புக் கம்பி வைத்திருப்பது போன்று இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்