திருமணத்திற்கு தயாரான ரஜினி பட நடிகை?
|நடிகை நிவேதா தாமஸ், கமல்ஹாசனுடன் 'பாபநாசம்', ரஜினியுடன் 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
திருவனந்தபுரம்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா தாமஸ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'பாபநாசம்' மற்றும் ரஜினியுடன் 'தர்பார்' படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இவரின் தற்போதைய பதிவு இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. அதன்படி இவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'அதிக நாளாகிவிட்டது.. ஆனால்.. இறுதியாக..' என்று இதய எமோஜுடன் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்களில் சிலர் புதிய படம் குறித்த அறிவிப்பா? என்றும் சிலர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
நிவேதா தாமஸ் காதலில் விழுந்தாரா? அல்லது புதிய படத்தில் ஒப்பந்தமானது குறித்து பதிவு போட்டு இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.