< Back
சினிமா செய்திகள்
வித்தியாசமான கதைக் களத்தில் நிதின் சத்யாவின் கொடுவா
சினிமா செய்திகள்

வித்தியாசமான கதைக் களத்தில் நிதின் சத்யாவின் 'கொடுவா'

தினத்தந்தி
|
2 Sept 2022 3:28 PM IST

நிதின் சத்யா மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'கொடுவா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சத்தம் போடாதே, சென்னை-28, அரண்மனை உள்பட பல படங்களில் நடித்தவர், நிதின் சத்யா. இவர் தயாரிப்பாளராக மாறி சில படங்களை தயாரித்தார். சில வருட இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், 'கொடுவா' என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகி `பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா.

ராமநாதபுரத்தை களமாக கொண்ட படம் இது. இறால் பண்ணைகளை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. இறால் வளர்ப்பு பண்ணையை நடத்தும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதை.

'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த சுரேஷ் சாத்தையா, இந்தப் படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். தரண் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் செய்திகள்