< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
எனக்கு பிடித்த நடிகர் இவர்தான் - மத்திய மந்திரி நிதின் கட்கரி ருசிகர பதில்
|19 March 2024 9:11 PM IST
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய மந்திரி நிதின் கட்கரி, பிடித்த சினிமா நடிகர்கள் குறித்த கேள்விகளுக்கு சுவைபட பதிலளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரியிடம் இந்தி பட நடிகர்கள் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், விக்ராந்த் மாஸ்சி படங்கள் காண்பிக்கப்பட்டன. அதை பார்த்த கட்கரி இந்த 3 பேரும் நல்ல நடிகர்கள் என்றும், ரன்வீர் சிங் நடித்த பாஜிராவ் மஸ்தானி படத்தை பார்த்து ரசித்ததாகவும் கூறினார்.
பின்னர் நடிகைகள் கியாரா அத்வானி, ஆலியா பட், டாப்ஸி போட்டோக்கள் அவரிடம் காண்பிக்கப்பட்டபோது, அவர்களது திரைப்படங்கள் பார்த்தது இல்லை என்று பதிலளித்தார்.
தனக்கு பிடித்தமான நடிகர் அமிதாப் பச்சன்தான் என்றும், அவர் நடித்த ஜன்ஜீர், ஆனந்த் படங்களை 3 முறை பார்த்ததாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார் .