வலைத்தளத்தில் வைரலாகும் நித்யாமேனன் புகைப்படம்
|நடிகைகள் படப்பிடிப்புக்கு சென்றதும் மேக்கப் போட்டுக்கொள்வார்கள். சொந்த வேலையாக வெளியே செல்லும்போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் மேக்கப்புடனேயே இருப்பார்கள். இதற்காக ஒவ்வொரு நடிகையும் சம்பளம் கொடுத்து மேக்கப் கலைஞர்களை அருகிலேயே வைத்து இருக்கிறார்கள்.
வீட்டில் இருக்கும்போது மட்டுமே மேக்கப்பை கலைப்பது உண்டு. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் நித்யாமேனன் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் பாராட்டியும், இன்னும் சிலர் நித்யாமேனனா இது? அடையாளமே தெரியவில்லையே என்று வியந்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். நித்யாமேனனின் மேக்கப் இல்லாத புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.
தனுஷ் ஜோடியாக நித்யாமேனன் நடித்து கடந்த வருடம் வெளியான திருச்சிற்றம்பலம் படம் பெரிய வெற்றி பெற்றது. வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.