மழையை ரசித்தபடி பாட்டுப்பாடி வீடியோ வெளியிட்ட நித்யா மேனன்!
|நித்யா மேனன் ஜூலை மாத மழையை ரசித்து பாட்டுப்பாடி வீடியோ வெளியிடுள்ளார்.
கன்னட படத்தின் மூலம் 2006-ல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார் நித்யா மேனன்.
தமிழில் அவர் நடிப்பில் வெளியான, 'காஞ்சனா - 2', 'ஒகே கண்மணி', 'மெர்சல்', 'திருச்சிற்றம்பலம்' ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. அவர் நடிப்பில் உருவான 'குமாரி ஸ்ரீமதி', 'மாஸ்டர்பீஸ்' ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது 'டியர் எக்ஸஸ்' படத்தில் காதலில் தோல்வியடைந்த பெண் கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் காமினி இயக்குகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூரில் தனது வீட்டில் ஜூலை மாத மழையை ரசித்து பாட்டுப்பாடி வீடியோ வெளியிடுள்ளார். அதில், "பெங்களூரில் ஜூலை மாதத்தில் அரிதாகத்தான் வீட்டில் இருப்பேன். மரங்களுக்கு இடையிலும் பெங்களூரின் மேகங்களுக்கு மத்தியிலும் வீட்டில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியானது" எனக் கூறியுள்ளார்.