< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று படத்தின் முதல் பாடல் வெளியானது..!
|4 Jan 2024 12:22 AM IST
இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சென்னை,
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் 'மேகம் போல் ஆகி' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. தாமரை எழுத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.