< Back
சினிமா செய்திகள்
அதர்வா படத்தில் நடிக்க உள்ள நிஹாரிகா
சினிமா செய்திகள்

அதர்வா படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை

தினத்தந்தி
|
18 May 2024 12:37 PM IST

அதர்வா படம் மூலம் தெலுங்கு நடிகை நிஹாரிகா தமிழில் அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அதர்வா. இவர் தற்போது 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சித்தா படத்தில் நடித்து புகழ் பெற்ற நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நிமிஷா சஜயன் மலையாளத்தில் பிரபல நடிகையாக உள்ளார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் அதர்வாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்க இருக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது . இந்நிலையில், தெலுங்கு நடிகை இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகை நிஹாரிகா இந்த படம் மூலம் தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார்.

மேலும் செய்திகள்