< Back
சினிமா செய்திகள்
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
சினிமா செய்திகள்

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
20 Sept 2023 3:56 PM IST

ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில், ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்து ரஜினி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ-யிடம் இருந்து பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஜெய்ஷா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்