< Back
சினிமா செய்திகள்
Next update of Game Changer: 2nd song promo release date announcement
சினிமா செய்திகள்

'கேம் சேஞ்சர்' படத்தின் அடுத்த அப்டேட்: 2-வது பாடலுக்கான புரோமோ வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Sept 2024 8:38 PM IST

'கேம் சேஞ்சர்' படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இசையமைப்பாளர் தமன் `கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட்டுகள் நாளை முதல் வெளியாகும் என்று நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாவது பாடலான 'ரா மச்சா மச்சா' விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, 2-வது பாடலுக்கான புரோமோ வரும் 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார்.

மேலும் செய்திகள்