< Back
சினிமா செய்திகள்
`கோட் படத்தின் அடுத்த பாடல் - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல்
சினிமா செய்திகள்

`கோட்' படத்தின் அடுத்த பாடல் - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல்

தினத்தந்தி
|
27 April 2024 1:00 PM IST

சமீபத்தில் 'கோட்' படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியானது.

சென்னை,

லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்"(கோட்) என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷிய தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், கோட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். அதில், ஜூன் மாதம் அடுத்த பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்