< Back
சினிமா செய்திகள்
அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில்... லெஜண்ட் சரவணன் வெளியிட்ட பதிவு
சினிமா செய்திகள்

அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில்... லெஜண்ட் சரவணன் வெளியிட்ட பதிவு

தினத்தந்தி
|
21 Jan 2024 7:18 PM GMT

லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த 'லெஜெண்ட்' திரைப்படம், கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி இருந்தனர். நடிகை ஊர்வசி ரவுட்டேலா, நடிகர் விவேக், நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.

இந்த நிலையில், லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்'தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அடுத்த படத்தின் பணி தொடங்கிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்