< Back
சினிமா செய்திகள்
ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
19 May 2022 5:13 AM IST

நடிகர் ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ஆர்யா தற்போது 'கேப்டன்' என்ற படத்தில் நடித்துள்ளார். 'டெடி' திரைப்படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில் கேப்டன் திரைப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. மேலும் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


https://twitter.com/arya_offl/status/1526180340141678593?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1526180340141678593|twgr^|twcon^s1_&ref_url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/aryas-captain-to-release-on-september-8/articleshow/91603660.cms


மேலும் செய்திகள்