< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
புதுமுகங்களின் காதல் திகில் படம்
|13 Jan 2023 8:10 AM IST
புதுமுகங்கள் நவீன் நாயகனாகவும் மெரின் பிலிப் நாயகியாகவும் நடிக்கும் படம் `இன்னும் ஒரு காதல் பயணம்'.
பாடலீஸ்வரன் வில்லனாக அறிமுகமாகிறார். சார்லி, ஜி.பி.முத்து, ஜார்ஜ், சுவாமிநாதன், கும்கி அஸ்வின், மதன்பாப், ஜெய் ஆனந்த், கீர்த்தனா, தீபா, மகேந்திரன், காதல் அருண், தியா, மூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை ஆர்.டி.குஷால்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``மனம் ஒன்றுபட்டு மகிழ்ச்சியில் திளைக்கும் காதலனும் காதலியும் கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நேரும் ஆபத்தை திரில்லராகவும் விறு விறுப்பாகவும் சொல்லும் கதையம்சத்தில் உருவாக்குகிறோம்'' என்றார்.
ஒளிப்பதிவு: எஸ்.ஐ.சந்தோஷ் குமார், இசை: வாரன் சார்லி. இந்த படத்தை ஜி.காளையப்பன் தயாரித்து முக்கிய வேடத்தில் நடிக்கவும் செய்கிறார்.