< Back
சினிமா செய்திகள்
சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட்  ?
சினிமா செய்திகள்

சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் ?

தினத்தந்தி
|
14 Jun 2023 4:40 PM GMT

இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் சூர்யா, திஷா பதானியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை படப்பிடிப்பு முடிந்தது மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்