விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்..!
|இந்த படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சிங்கிள் ஷாட்டில் (Single Shot) 5 நிமிட சண்டைக்காட்சியைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் காட்சியமைப்பு குறித்து விஷாலிடம் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.