< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
24 Jan 2024 6:13 PM IST

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

சென்னை,

படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஹிட்லர்' படத்தின் முதல் பாடலான 'டப்பாசு' பாடல் நாளை (ஜனவரி 25) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்