< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
16 Aug 2023 10:53 PM IST

விஜய் ஆண்டனி இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

சென்னை.

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரோமியோ' திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் தனது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது

மேலும் செய்திகள்