< Back
சினிமா செய்திகள்
தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
1 Feb 2023 9:42 PM IST

'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The fast and furious) படத்தின் பத்தாம் பாகத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The fast and furious). இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் பத்தாவது பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' (The fast and furious) படத்தின் பத்தாம் பாகத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்