< Back
சினிமா செய்திகள்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
19 Jan 2024 11:59 AM IST

இந்த படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.

சென்னை,

நடிகர் சூரி தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடித்துள்ளனர்.

மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று (19.01.2024) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்