< Back
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் எஸ்.கே 20 படத்தின் புதிய அப்டேட்..!
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே 20' படத்தின் புதிய அப்டேட்..!

தினத்தந்தி
|
9 Jun 2022 3:12 AM IST

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்.கே 20' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்.கே.20' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 'எஸ்.கே.20' படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (09.06.2022) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.



மேலும் செய்திகள்