< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் புதிய அப்டேட்
|22 March 2024 10:35 PM IST
சமீபத்தில் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.
சென்னை,
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'இங்க நான்தான் கிங்கு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'மாயோனே' என்ற பாடல் நாளை (மார்ச் 23) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.