< Back
சினிமா செய்திகள்
ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
19 Sep 2024 9:51 AM GMT

ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் ஐஏஎஸ் அதிகாரியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். அதாவது, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் இருப்பதால், படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் என தமன் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்