'கிங் ஆப் கோதா' படத்தின் முதல் பாடல் குறித்த புதிய அப்டேட்..!
|கிங் ஆப் கோதா' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ள
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 'கிங் ஆப் கோதா' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Prepare yourself for an electrifying dance number from #KingOfKotha, starring @dulQuer and the graceful @ritika_offl, as they set the stage on fire!#KOKFirstSingle releasing on July 28th.@actorshabeer @Prasanna_actor #AbhilashJoshiy @NimishRavi @JxBe @shaanrahman… pic.twitter.com/a6W8XwwSnW
— Zee Studios South (@zeestudiossouth) July 26, 2023