கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் புதிய அப்டேட்
|'ஸ்டார்' படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார்
சென்னை,
'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது .இந்த நிலையில் ஸ்டார்' படத்தின் 2வது பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
#Star second single ❤️
— Sony Music South (@SonyMusicSouth) March 31, 2024
Stay tuned for #VintageLove, a magical glimpse at 6️⃣PM TOMORROW
A @thisisysr musical #STARMOVIE ⭐ @Kavin_m_0431 @elann_t @aaditiofficial @PreityMukundan @LalDirector @riseeastcre @SVCCofficial @Pentelasagar @BvsnP @ivyofficial2023 pic.twitter.com/wksgV9k8Wn