< Back
சினிமா செய்திகள்
கார்த்தியின் சர்தார்  படத்தின் புதிய அப்டேட்..!
சினிமா செய்திகள்

கார்த்தியின் 'சர்தார்' படத்தின் புதிய அப்டேட்..!

தினத்தந்தி
|
15 Jun 2022 7:06 PM GMT

இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

சென்னை,

கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் கடந்த வருடம் வந்தது.தற்போது எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், வயதான தோற்றத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவரது தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

நாயகிகளாக ராஷி கன்னா, மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும். மேலும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்