ஜி.வி.பிரகாஷின் ' ரிபெல் ' படத்தின் புதிய அப்டேட்
|சென்னை,
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ரிபெல்'' இந்த படத்தை ' ஸ்டூடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி உள்ளார்.இந்த படத்தில், மமிதா பைஜு கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் , ஆதித்யா உள்பட பலர் நடித்து உள்ளனர்.
இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து விட்டது.மேலும் 'ரிபெல்' படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.ஜி.வி. பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் 'ரிபெல்' படம் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்போது அறிவித்து உள்ளது.வருகிற - 22 -ந்தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் 'அழகான சதிகாரி' என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..
#Azhaganasathigari video song from #Rebel tomm pic.twitter.com/gcgCJvNB3I
— G.V.Prakash Kumar (@gvprakash) March 17, 2024