" துருவ நட்சத்திரம் " படத்தின் புதிய அப்டேட்
|இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் 3 பாடல்களை ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.