< Back
சினிமா செய்திகள்
தனுஷின்  வாத்தி படத்தின் புதிய அப்டேட்..!
சினிமா செய்திகள்

தனுஷின் 'வாத்தி' படத்தின் புதிய அப்டேட்..!

தினத்தந்தி
|
22 Dec 2022 10:23 PM IST

, 'வாத்தி' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'வாத்தி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்