'டெவில்' படத்தின் புதிய அப்டேட்
|சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
சென்னை,
'சவரக்கத்தி' படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. 'டெவில்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 'டெவில் 'படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Prepare to be enchanted#Devil_Tamil is hitting theaters on Feb 2Promising a wickedly delightful experience you won't want to skip✨#DevilFromFeb02
— Ramesh Bala (@rameshlaus) January 27, 2024
Link- https://t.co/Sczwjayfci
A @DirectorMysskin Musical @MaruthiLtd@gnanase9137312@Aathityaa3@shamna_kkasim… pic.twitter.com/gBChCw5b7z