< Back
சினிமா செய்திகள்
அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2 தொடரின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2' தொடரின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
21 Sept 2024 4:48 PM IST

நெட்பிளிக்ஸ் நிறுவனம் 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2' தொடரின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சென்னை,

அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் என்பது ஒரு அமெரிக்க அனிமேஷன் பேன்டஸி தொடராகும். இது மைக்கேல் டான்டே டிமார்டினோ மற்றும் பிரையன் கொனிட்ஸ்கோ ஆகியோரால் உருவாக்கப்பட்டது. நிக்கலோடியோன் அனிமேஷன் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள கார்ட்டூன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான தொடராகும். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தமிழிலும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

சீனாவில் தற்காப்புக் கலைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. நீர், பூமி, நெருப்பு மற்றும் காற்று ஆகிய நான்கு கூறுகளில் சக்திகளை கையாளுவது போன்ற காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கும். இந்த நான்கு கூறுகளின் சக்தியை அவதார் ஒருவரால் மட்டுமே கையாள முடியும்.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர் சீசன் 2-ன் பணியை மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது 17 வயதான மியா செச் டாப் என்ற கதாபாத்திரம் இந்த சீசனில் அறிமுகமாக உள்ளது. இதில் அந்த கதாபாத்திரம், அவதாருக்கு பூமியின் சக்தியை கற்று தருபவராகவும், எதிரிகளை அழிப்பதற்கு அவதாருக்கு உதவுபவராகவும் உள்ளார். மேலும் இந்த தொடர் அதன் மூன்றாவது சீசனுடன் முடியவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்