< Back
சினிமா செய்திகள்
நடிகர் சூர்யாவின் 43-வது படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
2 Jan 2024 2:33 PM IST

இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சூர்யா 43' படத்தின் பாடல் ரெக்கார்டிங் தொடங்கியுள்ளதாகவும் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி 'தீ'யுடன் தொடங்கி இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்