< Back
சினிமா செய்திகள்
விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புதிய பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
9 March 2024 8:58 PM IST

'ரத்னம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 26-ம்தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'ரத்னம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 26-ம்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலான "டோண்ட் வொரி டா மச்சி" என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை வி.ஐ.டி கல்லூரியில் நடைபெற்ற வைப்ரன்ஸ் நிகழ்வில் படக்குழு வெளியிட்டது. பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை தேவி ஶ்ரீ பிரசாத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்