< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு
|20 Aug 2024 5:08 PM IST
'விடாமுயற்சி' படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் கணேஷ் சரவணன் மற்றும் தசரதி ஆகியோரின் முதல் தோற்றம் அதில் வெளியாகியுள்ளது.
அஜித் விடாமுயற்சி படத்தைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.