'ககுடா' படத்தின் புதிய அப்டேட் கொடுத்த சோனாக்சி சின்கா
|நடிகை சோனாக்சி சின்கா 'ககுடா' படத்தின் புதிய அப்டேட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது 'ககுடா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சாகிப் சலீம் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சோனாக்சி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ககுடா' படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து புதிய அப்டேட்கொடுத்துள்ளார். அதில், அவர் கையில் ஒரு தீப்பந்தத்தை வைத்து இருட்டில் நின்று கொண்டிருக்கிறார். திகில் மற்றும் நகைச்சுவையான இப்படம் அடுத்த மாதம் 12-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.