'தங்கலான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
|‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் டேனியல் கால்டகிரோனின் பிறந்தநாளை முன்னிட்டு 'தங்கலான்'. படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
A deadly combination of daring and diligence
— pa.ranjith (@beemji) June 18, 2024
Here's wishing the captivating and talented @DanCaltagirone a gleaming birthday!
Wishes from team #Thangalaan ✨#HBDDanielCaltagirone@Thangalaan @chiyaan @GnanavelrajaKe @StudioGreen2 #JyotiDeshpande @jiostudios… pic.twitter.com/rLQ0iMatXK