< Back
சினிமா செய்திகள்
New poster release of Kubera
சினிமா செய்திகள்

'குபேரா' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
28 July 2024 1:43 PM IST

தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

நடிகர் தனுஷ் தனது 51-வது படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இதில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்திற்கு 'குபேரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நடிகர் தனுஷ் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் 'குபேரா' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் 'குபேரா' திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்