< Back
சினிமா செய்திகள்
கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
16 Jan 2023 6:36 PM IST

கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கார்த்தி நடிக்கும் 25-வது திரைப்படத்தை 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' பட நாயகி அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'ஜப்பான்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. கார்த்தி கோபமாக நிற்பது போன்று இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்