அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
|'விடாமுயற்சி' போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, சந்தீப் கிஷன், ஆரவ் , ரெஜினா கசாண்ட்ராஉள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் 'விடாமுயற்சி' படக்குழு தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.இதில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர்.
Presenting the look of actor @ReginaCassandra from VIDAAMUYARCHI. Bravery knows no bounds! #VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/z2JRXlbG8o
— Lyca Productions (@LycaProductions) August 11, 2024