< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விக்ரம் பிரபுவின் புதிய படம்
|8 Jun 2023 8:18 AM IST
விக்ரம் பிரபு, பாயும் ஒளி நீ எனக்கு, ரெய்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இதில் விக்ரம்புரபு ஜோடியாக ஈசா ரெப்பா நடிக்கிறார். லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ரமேஷ் ரவிச்சந்திரன் டைரக்டு செய்கிறார். இவர் சுசீந்திரன், சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது என்றும், வழக்கமான சைக்கோ திரில்லர் படமாக இல்லாமல் இது வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். விக்ரம்பிரபு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.