நடிகர் யோகிபாபு கதாநயகனாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் - வெளியிட்ட படக்குழு
|ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்குகிறார்.
சென்னை,
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான "ஒரு கிடாயின் கருணை மனு" மற்றும் "சத்திய சோதனை" படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்.பி.டாக்கீஸ் சார்பில் எஸ்.ஆர். ரமேஷ் பாபு மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.