< Back
சினிமா செய்திகள்
விஷால் 34 படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது..!
சினிமா செய்திகள்

'விஷால் 34' படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது..!

தினத்தந்தி
|
27 Nov 2023 12:03 PM IST

இயக்குனர் ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார்.

சென்னை,

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு 'விஷால் 34' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த நிலையில் 'விஷால் 34' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்