< Back
சினிமா செய்திகள்
வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை - நடிகை மாளவிகா மோகனன்
சினிமா செய்திகள்

வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை - நடிகை மாளவிகா மோகனன்

தினத்தந்தி
|
23 Aug 2024 7:20 PM IST

நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகை மாளவிகா மோகனனின் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் பணியாற்றியவர். அதைத்தொடர்ந்து கடந்த 2019 ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மேலும் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றார். இவ்வாறு நடிகை மாளவிகா மோகனனின் விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தற்போது இவர் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் சர்தார் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கூட்டணியில் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் விக்ரம், பார்வதி ஆகியோர் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

அதேபோல் மாளவிகா மோகனனும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். தங்கலான் படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் தங்கலான் படத்தில் நடித்த அனுபவங்களை தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

கொளுத்தும் வெயிலில் 10 மணி நேரம் படப்பிடிப்பு, எருமையில் சவாரி செய்தது, சிங்கிள் ஷாட் சண்டை காட்சிகள், எரியும் பாறையில் நின்றது என வேறு எந்த படத்திற்காகவும் இந்த அளவிற்கு உழைத்ததில்லை. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது நெகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்