அருண் விஜய் நடித்துள்ள 'சினம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு..!
|"நெஞ்செல்லாம்" பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கார்கி வரிகளில் ஜி.வி. பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் இணையத்தை ஆகிரமித்து வருகிறது.
சென்னை,
நடிகர் அருண் விஜய் தற்போது ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தல் 'சினம்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் 'பாரி வெங்கட்' என்ற சப் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 'சினம்' படத்திற்கு 'சாகா' புகழ் ஷபீர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் எஸ் கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்., 'சினம்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "நெஞ்செல்லாம்" பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கார்கி வரிகளில் ஜி.வி. பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் இணையத்தை ஆகிரமித்து வருகிறது.
Here's the breezy #Nenjellam single from @arunvijayno1 's #Sinam Sung by @gvprakash & @sivaangi_k
— MovieSlidesPvtLtd (@MSPLProductions) August 26, 2022
▶️ https://t.co/pGuGa6Dmz9#SinamfromSept16 @ShabirMusic @MSPLProductions @gnr_kumaravelan #Vijaykumar @kaaliactor @gopinath_dop @madhankarky @Muzik247in@DoneChannel1 pic.twitter.com/cgaWLeZSxt