< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் உடல்நிலை குறைவால் காலமானார்
|3 Feb 2023 9:39 AM IST
பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞராக அறிமுகமான நெல்லை தங்கராஜ் உடல்நிலை குறைவால் காலமானார்.
நெல்லை,
பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான அவர் பெண் தெருக்கூத்து கலைஞராக நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர் நெல்லை தங்கராஜ்.
தெருக்கூத்துக்கலைஞரான இவர், குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த நிலையில், அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.