நீயா... நானா... போட்டி: கவர்ச்சியில் மல்லுக்கட்டும் நடிகைகள்
|கதாநாயகிகள் தங்களது மார்க்கெட் குறையும்போதெல்லாம் விட்ட வாய்ப்பை பிடிக்கவேண்டும் என்பதற்காக கவர்ச்சி பாதையில் இறங்குவார்கள்.
இப்போது அது 'போட்டோஷூட்' என்ற பெயரில் டிரெண்டாகி வருகிறது. இளம் கதாநாயகிகள் முதல் முன்னணி கதாநாயகிகள் வரை 'போட்டோஷூட்' மோகம் காரணமாக கவர்ச்சியில் கலக்கி வருகிறார்கள். ஆனால் இது மோசமான விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
ஒரு காலத்தில் சினிமாவில் கலக்கிய கிரண் தற்போது படுமோசமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இதுதவிர கவர்ச்சி படங்களை தனியாக அனுப்ப கட்டணமும் வசூலிக்கிறார். இதற்காக தனி செயலியும் உருவாக்கி இருக்கிறார். பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோதும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் கிரண். அதேபோல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன், ரம்யா பாண்டியன், யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, ஷிவானி ஆகியோரும் கவர்ச்சியில் ரசிகர்களை 'ஜில்'லிட வைத்து விடுகிறார்கள்.
பாவனா, ஸ்ரேயா, எமி ஜாக்சன், அமலாபால் போன்ற முன்னணி நடிகைகளும் தற்போது கவர்ச்சி படங்களை தாராளமாக வெளியிட்டு வருகிறார்கள். நீயா... நானா... என்ற போட்டியில் நடிகைகள் காட்டும் தாராள கவர்ச்சி ரசிகர்களுக்கு ஒருபக்கம் விருந்து படைத்தாலும், இப்படியா மோசமாக இறங்குவது? என்ற விமர்சனங்களையும் எழுப்பி வருகிறது. ஆனாலும் 'கவர்ச்சி காட்டுவதில் தவறு இல்லை, ஆபாசம் தான் கூடாது' என்ற முன்னோரின் (சினிமாவில்) வாக்கின்படி தங்கள் தரப்பில் இருந்து நியாயமான கருத்துகளை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள்.