நடிகை அம்மு அபிராமி நடித்துள்ள 'ஜமா' படத்தின் வீடியோ பாடல் வெளியீடு
|நடிகை அம்மு அபிராமி நடித்த ‘ஜமா’ திரைப்படத்தின் முதல் பாடலான‘நீ இருக்கும் உசரத்துக்கு’ என்ற வீடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை,
'கூழாங்கல்' திரைப்படத்தை உருவாக்கிய லெர்ன் அண்ட் டெக் புரோடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது. பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்துள்ளார்.
அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்தா எம்.ஏ. படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீகாந்த் கோபால் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
தெருக்கூத்து சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 'ஜமா' திரைப்படத்தின் முதல் பாடலான 'நீ இருக்கும் ஒசரத்துக்கு' என்ற வீடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.