< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

நயன்தாரா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
23 Nov 2022 4:43 PM GMT

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கோல்டு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'நேரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் பெரிய வரவேற்பை பெற்றது.

'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'கோல்டு'. பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகை நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். 'கோல்டு' திரைப்படம் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'கோல்டு' திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.




மேலும் செய்திகள்